ராபர்ட் வதேரா டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, முதுகு வலி காரணமாக டெல்லி நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, ரேபரேலியில் 3 நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரியங்கா நேற்று புறப்பட்டு சென்றார்.

Tags : Robert Wadera , Robert Wadera, discharged
× RELATED மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை...