அமித்ஷா பிறந்த நாள் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பாஜ தேசிய தலைவரும். மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நேற்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு பாஜ மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மத்திய அமைச்சரவையில் என்னுடன் இணைந்து பணியாற்றும் அமித் ஷாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மிகவும் கடின உழைப்பாளி. அனுபவம் வாய்ந்தவர். சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். மத்திய அரசின்  செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பவர். வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதில் அவர் மதிப்புமிக்க பங்ளிப்பை வழங்குகிறார்,’ என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: