பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள ‘பாரத் கி லட்சுமி’ விளம்பர தூதர்களாக தீபிகா படுகோன், பி.வி.சிந்து அறிவிப்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ள ‘பாரத் கி லட்சுமி’ பிரசாரத்தின் விளம்பர தூதர்களாக இந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள பெண்கள் செய்துள்ள சாதனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக ‘பாரத் கி லட்சுமி’ என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது டிவிட்டர் செய்தியில், “இந்தியாவின் பெண்கள் சக்தி என்பது திறமை மற்றும் விடாமுயற்சி, மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

Advertising
Advertising

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபடுவதையே நமது பண்பாடு எப்போதும் நமக்கு கற்றுத்தருகிறது. ‘பாரத் கி லட்சுமியை’ கொண்டாடும் செய்தியை தீபிகா படுகோன், சிந்து ஆகியோர் இந்த வீடியோவில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்” என்று கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த பிரசாரத்துக்கு தீபிகாவும், சிந்துவும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: