பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்காக ரயில் தண்டோரா செயலி தொடக்கம்

சென்னை : ரயில்வே பணியாளர்கள், பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரயில் தண்டோரா என்ற புதிய செயலியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த செயலில் பயணிகள், ரயில்வே பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி வணிக துறையின் சார்பில் வெளியடப்படும் அனைத்து சுற்றறிக்கைகளும் இதில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Rail Tandora Processor ,Travelers ,Train Tandora , employees ,travelers, Train Tandora, processor
× RELATED அனகாபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் மேற்கூரை,...