×

வடகிழக்கு பருவமழை எதிரொலி மின் தடை புகார் எண்கள் அறிவிப்பு: மின்வாரியம் நடவடிக்கை

சென்னை:மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட மின்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். இதில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை ஏற்கனவே இயங்கிவரும் மின்தடை புகார் எண்ணான 1912 என்ற எண்ணுடன், மின்வாரிய தலைவர் புகார் மைய எண்களான 044-28524422 மற்றும் 044-28521109 மற்றும் வாட்ஸ்அப் எண்ணான 94458 50811 மற்றும் அமைச்சர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 044-24959525 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தடையின்றி தெரிவிக்கலாம்.

Tags : monsoon , Echoes, Northeast Monsoon,Electrical Barrier,Electricity Action
× RELATED கேரளாவில் இன்று முதல் பொத்துக்கிட்டு ஊத்தும் வானம்: பருவமழை தீவிரமாகிறது