×

ஊதிய உயர்வு கோரி 25ம்தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: போராட்ட ஆயத்த கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு, முதுநிலை மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் தொடர வேண்டும் என்பது உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் போராட்டத்தை அறிவித்தனர். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களை  டாக்டர்கள் நடத்தினர். ஆனால், அரசு போராட்டத்தை கண்டுகொள்ளாத நிலையில் ஆகஸ்ட் 27ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அப்போது ஆறு வாரத்திற்குள் டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. தற்போது, 8 வாரங்கள் ஆகியும் அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.   

இதனால், வரும் 25ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான போராட்ட ஆயத்த கூட்டம் சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற டாக்டர்கள் கூடுதல் பணிச்சுமை, எதற்காக அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.  அதன்படி, வரும் 25ம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : strike ,doctors ,meeting. , Demanding , pay rise, Doctors strike ,indefinitely
× RELATED கும்பகோணத்தில் தூய்மை பணியாளர்கள்...