மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி

சென்னை: மர்ம காய்ச்சலுக்கு 2பேர் பரிதாபமாக இறந்தனர்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், நேதாஜி நகர், காமராஜ் தெருவை சேர்ந்தவர் பூபாலன்- குமுதாதேவி தம்பதியினரின் மகள் புவனேஸ்வரி (10). அங்குள்ள  தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் புவனேஸ்வரிக்கு காய்ச்சல் அதிகமாகி  வாந்தி எடுத்து வீட்டில் மயங்கினார். பெற்றோர் உடனே குழந்தையை அம்பத்தூரில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertising
Advertising

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.பெரும்புதூர்: ஒடிசா மாநிலம், ஷாங்கா பாங்கா கிராமத்தை சேர்ந்தவர் நரஹரு பாட்ரா. இவரது மகன் சாரதி பாட்ரா (24). பெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.கடந்த ஒரு வாரமாக சாரதி பாட்ராவுக்கு காய்ச்சல், வயிற்று வலி ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை மயங்கி விழுந்தார். அவரை  பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி பாட்ரா பரிதாபமாக இறந்தார்.

Related Stories: