10, பிளஸ்-2 பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி, இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பிளஸ்1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணைகளில் தேர்வுக்காலம் இரண்டரை மணி நேரம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளதாலும், மாணவர்கள் நலன் கருதி மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள மேற்கண்ட தேர்வுகளின் நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படும். மேலும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோரும் 3 மணி நேரம் தேர்வு எழுத வேண்டும். தேர்வின்போது கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 மணி முதல் 10.10 மணி வரையும், விடைத்தாள் முகப்பில் உள்ள விவரங்களை சரிபார்க்க 10.10 மணி முதல் 10.15 மணிவரையும், விடை எழுதுவது 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் (3மணி நேரம்) என மொத்தம் 3.15 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: