காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: கட்சி தலைமைக்கு பகிரங்க எச்சரிக்கை

சென்னை: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நலன் விரும்பிகள், கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அதிமுக கட்சியையும்,  ஆட்சியையும் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் புதியதாக ஒருவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.  அப்போதுதான் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், அதைத்தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் நாம் வெற்றிபெற முடியும்.

Advertising
Advertising

சாதாரண நிலையில் இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் இன்று சென்னையில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மற்றும் சென்னை பத்திரப்பதிவு அலுவலகங்களில் இவரது பினாமிகள் மூலம்  தினமும் ஏதாவது ஒரு இடமோ அல்லது வீடோ பத்திரப்பதிவு நடந்து கொண்டேதான் இருக்கும்.உளவுத்துறையின் மூலமாக இவர் செய்யும் அநியாயங்களை தலைமை தெரிந்திருந்தும் ஏன் தட்டி கேட்க இபிஎஸ், ஓபிஎஸ் மறுக்கிறார்கள்?  ஜெயலலிதாவின் வழியில் கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் தலைமை, இவ்வளவு தவறுகள் செய்து, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் கட்சியை குட்டிச்சுவர் ஆக்கி வரும் இவரை கட்சி தலைமை ஏன்  கண்டிக்காமலும், தண்டிக்காமலும் இருக்கிறது?இதற்கு பிறகும் சிட்லபாக்கம் ராஜேந்திரனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்காமல், அவரே மாவட்ட செயலாளராக நீடிக்கப்படுவாரேயானால் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த  அதிமுகவினர் ஒன்றுகூடி கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும், பெண்களோடு இவருக்கு உள்ள கள்ளதொடர்பையும் போட்டோ ஆதாரத்தோடு அனைத்து அரசு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து தெரிவிப்போம்.

Related Stories: