குடிநீர் பயன்பாட்டிற்காக பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 440 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: சென்னைக்கு மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 440 கனஅடி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்ப தொடங்கியுள்ளன. ஏற்கனவே பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையில் இருந்து 857 கனஅடி தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது. இதனால் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நேற்றைய நீர்மட்டம் 1273 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதில் பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து  கொண்டிருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

எனவே, சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 442 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் புழல் ஏரியின்  நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.  தொடர்ந்து, ஏரிகளுக்கு தண்ணீர் வரும் பட்சத்தில் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது.

Related Stories: