மருத்துவ தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தீபாவளிக்கு மறுநாள் (அக்டோபர் 28ம் தேதி) பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம் சார் அறிவியல் படிப்பு மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறவிருந்தன. இந்தநிலையில், அன்றைய தினம் அரசு  விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: