ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா? பிரக்சிட் ஒப்பந்தத்தின் முழு விவரம் வெளியீடு

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் விவரங்களை பிரதமர் ேபாரிஸ் ஜான்சன் வெளியிட்டார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இந்நாட்டு பிரதமர் தெரசா மே பதவி விலகினார். இந்த நிலையில், புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிரக்சிட்டை நிறைவேற்ற முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.

இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடிக்க கோரும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிக்க கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில், திருத்தப்பட்ட பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விவரங்களை பிரிட்டன் அரசு நேற்று வெளியிட்டது. மேலும், பழைய பிரக்சிட் ஒப்பந்தத்தை திரும்ப பெறும் மசோதா தொடர்பான 110 பக்க ஆவணங்களை, எம்பி.க்கள் விவாதிக்க தொடங்குவதற்கு முன் போரிஸ்  வெளியிட்டார். மசோதாவை திரும்ப பெறுதல் தொடர்பான போரிசின் இந்த ஒப்பந்த மசோதாவை ஆதரிக்கலாமா என்பது குறித்து எம்பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

Related Stories: