பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் உடல்நிலை கவலைக்கிடம் : சகோதரர் பரபரப்பு எச்சரிக்கை

லாகூர்: ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி, பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் இழந்தார். அவர் மீது 3 ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, கோட் லக்ப்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில், சிறையில் நவாசின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவாசின் உடலில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நவாசின் மூத்த சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், ‘‘நவாசின் உடல்நிலை  மிகவும் மோசமடைந்த பிறகுதான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு பிரதமர் இம்ரான்கான்தான் காரணம்,’’ என தெரிவித்தார்.

Related Stories: