வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் : வாலிபருக்கு சரமாரி அடி உதை

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவரான இவரது கணவர், ேநற்று முன்தினம் இரவு சவாரிக்கு சென்றுவிட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பிரகாஷ் (19) என்ற வாலிபர், ராணி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்து ராணியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராணி அலறி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர்  ஓடி வந்து, பிரகாஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து எம்ஜிஆர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிரகாஷ் மீது ஏற்கனவே அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்து இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: