மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது

சென்னை : சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு மணிமேகலை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ராஜேஷ் குடும்பத்தினர் கேட்ட நகை மற்றும் பணம் சீர்வரிசையை மணிமேகலை பெற்றோர் கொடுத்துள்ளனர்.

ஆனால், அது போதாது என்று ராஜேஷ் தினமும் குடித்துவிட்டு நகை மற்றும் பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மணிமேகலை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம், தனது கணவர் ராஜேஷ் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நகை மற்றும் பணம் கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.

Related Stories:

>