மெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

சென்னை: அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை யில்  ரோந்து சென்ற போது இரண்டு பேர் வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்த பிரவீன் (எ) கைப்புள்ளை (27), பிரசாந்த் (26) என்று தெரியவந்தது. ரவுடிகளான இருவர் மீதும் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 ரவுடிகளையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: