பல்லாவரம் அருகே நள்ளிரவில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் ஓட்டம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிரதான சாலையில் ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்ம நபர், பணம் எடுப்பது போல் நடித்து, தயாராக கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியால் ஏடிஎம் மெஷினை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.  

Advertising
Advertising

அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து வந்த வங்கி ஊழியர்கள்,இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், அருகில் கட்டுமான பணி நடைபெற்று வந்த புதிய கட்டிடத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம், திருவத்தூரை சேர்ந்த அருள்மணி (26) என்பவர் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: