வெளிநாட்டு முதலீடுகள் மத்திய அரசின் புது திட்டம் சிக்கல்களை தீர்க்குமா?

புதுடெல்லி: இனிமேல் இந்தியாவில் முதலீடு செய்வது என்பது எளிதாக இருக்கும் அதற்காக, மத்திய அரசு புதிய முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்தபட்சம் 500 மில்லியன் டாலர் (ரூ.3,545 கோடி) முதலீடு செய்ய விரும்பினால், அந்த முதலீட்டாளர், அனைத்து மத்திய, மாநில அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் அனுமதியைப் பெறுவதற்கு உதவும் வகையில் ‘தொடர்பு மேலாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரையில் அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு  அந்த உயர் அதிகாரி வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பார். முதலீட்டாளர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படுவதால் முதலீடு அதிகரிக்கும்.

Advertising
Advertising

குஜராத் மாநிலத்தில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இந்த புதிய உத்தியை மத்திய அரசின் டிபிஐஐடியும் இன்வெஸ்ட்மென்ட் அமைப்பும் இணைந்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. முதலீடு செய்வதற்கு இதுவரையில் உள்ள தடைகளை நீக்கி முதலீடு செய்வது என்பது மிக எளிதான செயல் என்ற ரீதியில் ஓப்புதல், அனுமதி, தடையில்லா சான்றிதழ் ஆகியவை பெறுவது என்பது ஒற்றைசாளர முறையில் எளிதாகப்படுகிறது. புதிய திட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டிபிஐஐடியின் செயலாளர் குருபிரசாத் மொகோபாத்யாயா தெரிவித்தார். புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கற்ற அவர் இது குறித்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் விவாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த அதிகாரியான குருபிசாத், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மேற்கொண்ட இணக்கமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதே உத்தியை கடைப்பிடித்து முதலீடுகளை ஈர்க்க இந்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

* தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி), இன்வெஸ்ட்மென்ட் இந்தியா ஆகியவை இணைந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, புதிய உத்தியை வகுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பெரும்பாலான அன்னிய முதலீட்டாளர்கள், தாங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் தங்களது முதலீடு திட்டங்களை செயல்படுத்த முடியாமல் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறியிருந்தனர்.

Related Stories: