வேலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2021க்குள் நிறைவு: கலெக்டர் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டும் பணிகள் குறித்த விவரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாநகராட்சி, அரக்கோணம், திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் சேதமடைந்த சாலைகளை மீண்டும் சீரமைப்பதற்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி கமிஷனர், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த வாரம் 2 முறை நடந்தது.

அரக்கோணம் நகராட்சியில் 69 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 11 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 23 கி.மீ நீளத்திற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு 9 கி.மீ நீளத்திற்கு  பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 கி.மீ நீளத்திற்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற்று முடிக்கப்படும்.ஆம்பூர் நகராட்சியில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்ட 110 கி.மீ நீளத்திற்கு பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் முடிந்துள்ளது. அதேபோல், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளும் முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்தும் சாலை அமைக்கப்படும்.

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை பணிகள் 86 கி.மீ நீளத்திற்கு ஆரம்பிக்கப்பட்டு 71 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. இதில் 56 கி.மீ நீளம் திருப்பத்தூர் நகராட்சிக்கும், 10 கி.மீ  நீளமானது நெடுஞ்சாலைத்துறையினருக்கும் உரியது. மேலும் 5 கி.மீ மண் சாலை நகராட்சி மூலம் புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள 18 கி.மீ நீளமுள்ள சாலையில் நவம்பர் 30ம் தேதிக்குள் பணிக்குள் நிறைவு  பெறும். 230 கி.மீ நீளத்திற்கு பிற பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், 43 கி.மீ பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 2021ம் ஆண்டு முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: