அக்.24-ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் பங்கேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24-ம் தேதி நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். இந்தியாவில் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.  பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புது துணி மற்றும் பட்டாசு உள்ளிட்ட பண்டிகை பொருட்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவிலும் அதன் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது.  அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24-ம் தேதி நடக்கும் தீபம் ஏற்றும் விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடக்கவுள்ள இந்த விழாவில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும்  வழக்கத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா முதன்முறையாக கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கிவைத்தார். அவரை தொடர்ந்து ட்ரம்பும் தீபாவளி விழாவில் பங்கேற்று வருகிறார். அவர் பங்கேற்கும் 3-வது தீபாவளி கொண்டாட்டம்  இது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories: