×

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பென்சில் சுவரோவியம்

அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உணர்ந்த கட்டிட வல்லுநர்கள் புது யுக்தியை கையாண்டனர்.

அதன்படி, சுவரின் ஒரு புறம் எல்லைப்பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில்  ஓவிய வல்லுநர்களை கொண்டு வரையப்பட்டது. அதே வரலாற்று நிகழ்வுகள் சுவரின் மற்றொரு புறத்தில், பென்சில் கொண்டு தீட்டப்பட்டது. இறுதியாக பென்சில் கொண்டு வரையப்பட்ட பகுதி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.  இந்த சுவர் ஓவியம் லத்தின் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பாரகுவே, பெரு, பொலிவியா நாட்டை சேர்ந்த ஓவியக்கலை வல்லுநர்களை கொண்டு 12 நாட்களில் வரையப்பட்டது.


Tags : 55 Artists, Guinness Record, Book, Pencil Mural
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்