×

11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம்

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலம் சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆனதை விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி11 ஐ செயற்கைக்கோளை பயன்படுத்தி, கடந்த 2008 அக்டோபர் 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, வரை 312 நாட்களில் சந்திரயான் -1 நிலவை 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது.

இஸ்ரோவின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் சந்திரயான் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அப்போது வானிலை மோசமானதாக இருந்தது என்றும் பதற்றமான சூழல் நிலவிய போதும் விஞ்ஞானிகள் தங்களின் இஷ்ட தெய்வங்களை கணினியில் உள்ள புகைப்படங்களுடன் வேண்டிக்கொண்டிருந்தனர் என்றும் மயில்சாமி அண்ணாதுரை நினைவு கூர்ந்துள்ளார்.   


Tags : 1 year, completed, Chandrayaan 1, project
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...