உலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்

வூஹான்: உலக ராணுவ போட்டிகள் 2019-ல் பங்கேற்ற மாற்றுத்திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7-வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.  

சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பதக்கம் வெல்வது அவருக்கு புதியது அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

Related Stories: