கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெற்றது இந்திய வானிலை மையம்

டெல்லி: கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் திரும்ப பெற்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனிடையே கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பேரிடர் மீட்புக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

Advertising
Advertising

கேரளாவின் கண்ணூர், காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மக்கள் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தது. இடுக்கிக்கு ஆரஞ்சு, பத்தினம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் திரும்ப பெற்றது.

Related Stories: