×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5% உயர்வு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர் களுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று  தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்ட  அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் ஓய்வூதியதார்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படியை 1-7-2019 முதல் கணக்கிட்டு கூடுதல் ஊதியமாக 5 சதவீதம் வழங்கப்படும். அதன்படி, தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (வங்கி) மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

Tags : teachers ,government employees ,pensioners , Followed , civil servants , teachers,pensioners
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...