சுவர் இடிந்து பெண் காயம்

அண்ணாநகர்: நொளம்பூர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (85). குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று காலை இவரது வீட்டு சுவர் இடிந்து, சரஸ்வதி மீது விழுந்தது. இதில் அவரது முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக சரஸ்வதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு  விசாரிக்கின்றனர். 


Tags : wall collapses,woman is hurt
× RELATED திருட வந்த இடத்தில் ஞானோதயம் ஓ... ராணுவ...