சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து பைக் திருடிய ஆசாமிகள்

பல்லாவரம்: அனகாபுத்தூர் எல்ஐசி காலனி 6வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ைப சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (32). இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை, பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்தபோது, நேற்று அதிகாலை ஒரு மணி அளவில், குரங்கு குல்லா அணிந்த இருவர், சையது இஸ்மாயில் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து சையது இஸ்மாயில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா இருப்பதை முன்னதாகவே நோட்டம் விட்ட மர்ம நபர்கள், போலீசில் சிக்காமல் இருக்க குரங்கு குல்லா அணிந்து வந்து பைக்கை திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: