மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 1000 கன அடியாக அதிரடி குறைப்பு

மேட்டூர்: மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16,250 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16,227 கனஅடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,  மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 350 கனஅடியும் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நேற்று மாலை நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. திறப்பை விட வரத்து அதிகம் என்பதால், நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 117.04 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 117.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 90.00 டிஎம்சி. அதே நேரம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 2வது நாளாக விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Advertising
Advertising

Related Stories: