நாங்குநேரி தொகுதியில் அதிமுக ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நெல்லை: நாங்குநேரி ெதாகுதியில் அதிமுக ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையிலான போட்டி என நெல்லையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரி தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். ஆளுங்கட்சியின் படை பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் கொள்கையையும், சத்தியத்தையும் நம்பி போட்டியிடுகிறோம். அவர்கள் பணத்தையும்,  அதிகாரத்தையும் நம்பி போட்டியிடுகிறார்கள்.  

Advertising
Advertising

எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் களப்பிரர்கள் காலம் போல் தமிழகம் இருண்டு காணப்படுகிறது.  மோடிக்கு ஆதரவு, உள்ளூர் பாஜவுக்கு எதிர்ப்பு என்ற நிலையை அதிமுகவினர் கையாளுகின்றனர்.தொகுதி முழுவதும் பணத்தை இறைத்து விட்டு எங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏ மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆனால் சிலர் அவர்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் தடுக்கின்றனர்.  ஓட்டுப்போடுவதை தடுப்பது தேச விரோதம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: