×

அதிகாரிகள் கோரிக்கை வைக்காத நிலையில் தமிழகத்துக்கு அக்.30ம் தேதி வரை கிருஷ்ணா நீர் தர ஆந்திரா முடிவு: 8 டிஎம்சியில் இதுவரை 1.33 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது

சென்னை: தமிழகத்துக்கு அக்.30ம் தேதி வரை கிருஷ்ணா நீர் வரும் என்றும், இதுவரை 1.33 டிஎம்சி தண்ணீர் ஆந்திரா தந்துள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். இதில், முதல் தவணைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல்  வரை 4 டிஎம்சி தர வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணைகாலத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு  கோரிக்ைக வைத்தது. இதையேற்று, கடந்த 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் 500 கன அடி திறந்து விடப்பட்டது.  தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது. இந்த தண்ணீரை ஆந்திர எல்ைலயோர கால்வாய்பகுதிகளில் விவசாயிகள் மோட்டார் மூலம் உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு  குறைவாக உள்ளது. இதை தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி 701 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு தண்ணீர் வருகிறது. இந்த  நிலையில் தற்போது, 1.33 டிஎம்சி வரை தமிழகத்துக்கு வந்துள்ளது.

இதனால், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி 1237 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 30ம் தேதி வரை தண்ணீர்  திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த தவணை காலத்தில் 2 டிஎம்சி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கண்டலேறு அணையில் 30 டிஎம்சிக்கு மேல் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் கேட்கலாம். ஆனால்,  தமிழக அதிகாரிகள் கூடுதல் நீர் திறக்ககோரி கடிதம் எழுதவில்லை. இதனால், அக்.30ம் தேதியுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அடுத்த தவணை காலத்தில் தண்ணீர் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கண்டலேறு அணையில் 30 டிஎம்சிக்கு மேல் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் கேட்கலாம். ஆனால், தமிழக அதிகாரிகள்  கேட்கவில்லை

Tags : Krishna ,Andhra Pradesh , request, Krishna Water,Andhra Prades, Tamil Nadu
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...