ஐரோப்பிய ஓபன்மர்ரே சாம்பியன்

ஆன்ட்வெர்ப்: ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். இடுப்பு மூட்டு காயத்துக்கு கடந்த ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மர்ரே (32 வயது), நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் விளையாடத் தொடங்கி உள்ளார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மர்ரே வென்ற முதல் ஒற்றையர் ஏடிபி சாம்பியன் பட்டம் இது என்பதால் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த அவர், ‘இது மிகப் பெரிய வெற்றி. கடந்த சில ஆண்டுகள் மிகக் கடினமாக அமைந்த நிலையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார். மர்ரேவின் வெற்றிக்கு, எதிர்த்து விளையாடிய வாவ்ரிங்கா உட்பட டென்னிஸ் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: