2024ல் ஆதிக்கம் செலுத்தும் டாப் 20 நாடுகள் பட்டியல் வெளியீடு

வாஷிங்டன்: வரும் 2024ம் ஆண்டு உலக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய டாப் 20 நாடுகள் எவை என்ற கணிப்பை சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவை விட இந்தியா முன்னேற்றம் அடையும் என தெரிவித்துள்ளது.  பொருளாதார மந்த நிலையால் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக உள்ளது. ரிசர்வ் வங்கி மட்டுமின்றி பல்வேறு நிதி அமைப்புகள் இந்திய பொருளாதார நிலை குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.  இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடுகள் தரவரிசை கணிப்பை சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 2018-19ல் 32.7 சதவீதத்தில் இருந்து 2024ல் 28.3 சதவீதமாக குறையும்.

 உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு 13.8 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக குறையும். ஆனால், இந்தியாவின் பங்களிப்பு 15.5 சதவீதமாக உயரும். அதாவது, வரும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவை 3வது இடத்துக்கு தள்ளி இந்தியா, சீனாவுக்கு அடுத்ததாக 2வது இடத்துக்கு முன்னேற்றம் அடையும். இந்தோனேஷியா 4ம் இடத்தில் நீடிக்கும். இதுபோல், துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகியவை டாப் 20 நாடுகள் பட்டியலில் இணையும். உலகளாவிய வளர்ச்சி மந்தநிலை இந்த ஆண்டு 3 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

Related Stories: