தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல அரசு பஸ்சில் 66,773 பயணிகள் செய்த ரிசர்வேஷன் மூலம் 3.26 கோடி வசூல்: சந்தேகம் போக்க சிறப்பு தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 66,773 பயணிகள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு 3.26 கோடி வசூலாகியுள்ளது.தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தின் எல்லை பகுதி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள்  இயக்கப்படுகிறது. இது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, கடந்த ஆண்டுபோலவே கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், சானிடோரியம், கே.கே.நகர் உள்பட பல இடங்களில் இருந்து பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும். இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 24 முதல் 26 வரை தினசரி ஓடும் 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 4,265 என மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு வாயிலாக நாளது வரையில், சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 43,635 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 23,138 பயணிகளும் ஆகமொத்தம், 66,773 பயணிகள்  முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் கணிணி மூலம் ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம் மூலம் பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-26, தாம்பரம்  சானிடோரியத்தில்-2, பூவிருந்தவல்லி-1, மாதவரம் பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும். இந்த சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் வரும் 24ம் தேதி முதல் செயல்படும். அரசு  நிர்ணயித்துள்ள கட்டணத் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.  இதற்காக சென்னையில் 24, 25, 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: