குடி கெடுக்கும் மதுவுக்கு இலக்கு நிர்ணயிப்பதா?: அரசுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தீபாவளிக்கு 385 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதில் அக்கறை காட்டாமல், மது விற்பனைக்கு ₹385 கோடி இலக்கு நிர்ணயித்து  விற்றே ஆகவேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் அரசை எத்தகைய அரசு என்று கூறுவது? மக்கள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரித்து, மக்களை சீரழிக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகை நாளிலும் வேலை பார்க்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது கண்டிக்கத்தக்கது.

Related Stories: