×

மாமல்லபுரம் குறித்த கவிதை தமிழ் திரையுலகத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி

புதுடெல்லி: மாமல்லபுரம் குறித்து தமிழில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தின் அழகையும் கடலையும் வர்ணித்து கவிதை எழுதியிருந்தார். பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இயற்கையை  மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமம், ஏனெனில் இயற்கை தான் கடவுள். கடல் தொடர்பான தங்களின் அன்பான கவிதைக்கு  தேசத்தின் சார்பில் நன்றி’ என, பிரதமர் மோடியை டேக் செய்து விவேக்  பதிவிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட மோடி, ‘இயற்கையை மதிப்பது  நமது கலாசாரத்தின் முக்கியப் பகுதி, இயற்கை ஆன்மிகத்தையும்,  மகத்துவத்தையும் வெளிப்படுத்தும்’ என்றார். இதேபோல் தயாரிப்பாளர் தனஞ்செயனும், ‘தமிழ் மொழி மீதான பிரதமரின் அன்பு  அற்புதமானது’ என்றார். இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள மோடி, தமிழ்மொழி அழகானது எனவும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Mamallapuram. , Mamallapuram, Poetry, Tamil Movie World, PM Modi
× RELATED கொரோனா கால ‘சூப்பர் ஹீரோக்களுக்கு’...