திருப்பதி விஐபி தரிசன டிக்கெட்டில் மோசடி 23 இடைத்தரகர்கள் கைது

திருமலை: திருப்பதி கோயிலில் விஐபி தரிசன டிக்கெட் வழங்கி பக்தர்களிடம் அதிக பணம் வசூலித்த 23 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெகன்மோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 5 விஐபி தரிசன டிக்கெட்டுடன் பக்தர்கள் நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த டிக்கெட்டுகளை பெற்ற விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த டிக்கெட்டுகளை திருப்பதியைச் சேர்ந்த சீனிவாசிடம் 3 பக்தர்கள் 16,500ம், 2 பக்தர்கள் 7 ஆயிரம் கொடுத்தும்  வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசை பிடித்து விசாரணை செய்தபோது மேலும் 22 பேர் இதுபோன்று இடைத்தரகர்களாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த 23 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: