தேஜாஸ் ரயில் தாமதம் 1.62 லட்சம் இழப்பீடு

புதுடெல்லி: தேஜாஸ் ரயில் 3 மணி நேரம் தாமதம் ஆனதால், 950 பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மொத்தம் 1.62 லட்சம் இழப்பீடு வழங்குகிறது.  இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி - லக்னோ இடையே தேஜாஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 19ம் தேதி சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனது. அதாவது, லக்னோவில் இருந்து காலை 6.10க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் காலை 9.55க்கு புறப்பட்டது. இதனால் டெல்லிக்கு 12.25க்கு போக வேண்டிய இந்த ரயில் மாலை 3.40க்குதான் சென்றது. இதுபோல் மறு மார்க்கமாக, டெல்லியில் இருந்து மாலை 3.35க்கு பதிலாக 5.30க்கு புறப்பட்ட இந்த ரயில் லக்னோவுக்கு இரவு 10.05க்கு பதில் 11.30க்கு சென்று சேர்ந்தது. இதனால் லக்னோவில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 450  பயணிகள் தலா 250, டெல்லியில் இருந்து லக்னோ செல்ல வேண்டிய 500 பயணிகள் தலா 100 இழப்பீடாக பெறுவார்கள்.

Advertising
Advertising

இற்காக, ஐஆர்சிடிசி மொத்தம் 1.62 லட்சம் இழப்பீடு வழங்குகிறது.  பயணிகள் தங்கள் காப்பீட்டு நிறுவன வெப்சைட்டில் சென்று இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். கான்பூர் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே வரலாற்றில் தாமதத்துக்காக முதல் முறையாக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார். ஐஆர்சிடிசி விதிகளின்படி, ஒரு மணி நேர தாமதத்து 100, 2 மணி நேரத்துக்கு மேல் தாமதத்துக்கு 250 இழப்பீடாக வழங்கப்படுகிறது.

Related Stories: