INX மீடியா வழக்கு: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது டெல்லி சிறப்பு நீதிமன்றம்: 24-ல் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு  மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம்  சாட்டப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் தரப்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்காத காரணத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்ட கார்த்தி  சிதம்பரம் சுமார் 24 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 7 நாள் காவல் வழங்கி கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வரும் 24ம் தேதி பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார். இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து இன்றோடு 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில்,” ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, ஆடிட்டர் பாஸ்கரராமன், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே.புஜாரி, பிரபோத் சக்ஸ்சேனா உட்பட மொத்தம் 14 பேர்களின் பெயர்கள்  இடம்பெற்றிருந்தது.

குற்றப்பத்திரிக்கை தொடர்பான வழக்கை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வு, ப.சிதம்பரத்தை இம்மாதம் 24-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு டெல்லி சிறப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: