செல்ஃபி மியூசியம்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்மார்ட்போன்கள் நம் கைகளைத் தழுவ ஆரம்பத்ததிலிருந்து செல்ஃபி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதுவும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளுவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. இதைவிட சிலர் செல்ஃபிக்காக பல ஆபத்துகளையும் சந்திக்கின்றனர்.உதாரணத்துக்கு, ஓடும் ரயிலின் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது, உயரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது. இப்படி செல்ஃபி எடுத்து பதிவிட்டால் நிறைய லைக்குகள் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்படியான ஆபத்தான செல் ஃபிகளால் உயிர்போகும் அவலங்களும் அரங்கேறுகிறது. இளசுகளின் செல்ஃபி தாகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நிறுவனம் ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் ஒரு செல்ஃபி மியூசியத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் 24 அறைகள் உள்ளன.ஒவ்வொரு அறையும் மற்ற அறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு அறையில் டேபிள், நாற்காலி, விதவித உணவு வகைகள் இருக்கும். இந்த உணவு வகைகள் எல்லாமே போலியானவை. நீங்கள் மாபெரும் உணவகத் தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போன்று அங்கே செல்ஃபி எடுக்கலாம். அடுத்து நீர் வீழ்ச்சி போன்ற டிசனை செய்யப்பட்ட அறை. அதில் நீர்வீழ்ச்சி ஆரம்பிக்கிற இடத்தில் இருப்பதைப் போன்று செல்ஃபி எடுக்கலாம்.

இப்படி உலகின் பல அழகான விஷயங்களைக் கற்பனை வடிவில் அந்த அறைகளுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். ஒவ் வொரு அறையிலும் குறைந்தபட்சம் 20 செல்ஃபிகளாவது எடுக்க முடியும். அந்தளவுக்கு கோணங்களும், லொகேஷன்களும் உள்ளது.இந்த மியூசியம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் இங்கே எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், குறைந்தபட்ச கட்டணத்தை நாம் மியூசியத்துக்குள் நுழைவதற்காக தரவேண்டும். இனி மியூசியத்தின் எதிர்காலமே இந்த மாதிரி செல்ஃபிக்குதான்.

Related Stories: