சுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்: பொதுநல வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: சுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என பொதுநல வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டெங்கு தொடர்பான விஷயத்தில் நேரடியாக தலையிட்டால் முழுமையாக கட்டுப்படுத்தலாம் எனவும் கூறியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் டெங்கு பாதிப்பை கண்டறிய 3 முதல் பல நாட்கள் ஆகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கடந்த ஆண்டு காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக [பரவி வருகிறது. ஆனால் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். இதற்கு நீதிபதிகள் பொதுநல மனுக்கல் செய்யும் போது மனுதாரர் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது. உரிய ஆதாரங்களுடன் பொதுநல மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். போதிய முகாந்திரம் இல்லாமல் என நீதிபதிகள் கூறினர்.

அப்போது அரசு தரப்பில் மாவட்ட வாரிய அனைத்து சிறப்பு மருத்துவமனைகளிலும், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறப்பட்டது. சுகாதாரம், உள்ளாட்சித் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என கூறி நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: