×

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியா கூறுவதில் உண்மையில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்  தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறுவது  உண்மையில்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இதனால் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது, இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்டதுடன் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிவின் ராவத் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இடம் எவை என்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் இந்தியாவை கேக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறும் இடங்களுக்கு ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்களை நேரில் அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pak ,attack ,Kashmir ,India , No attack, India says no, Pakistan
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...