தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தென் ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertising
Advertising

அதுமட்டுமின்றி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில்: கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மழை, அணைகளின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.  

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனிக்கவும், தகவலை உடனே தரவும் உத்தரவு. கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மழை, அணை நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: