போடியில் கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலை

போடி: தேனி மாவட்டம், போடி தேரடி தெரு ஊரணிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (70). இவர் போடி அம்மாகுளத்தை சேர்ந்த முருகனிடம் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கி மாங்காய் வியாபாரம் செய்துள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையில் மாங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பாண்டியனுக்கு வட்டி கட்ட  முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முருகனும், அவரது மனைவி தங்கமணியும் பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த பாண்டியனையும், அவரது மனைவி ராமலட்சுமியையும் ஆபாசமாக திட்டியதுடன், வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டினராம். இதனால் மனமுடைந்த பாண்டியன் அக். 14ம் தேதி விஷம் குடித்தார். அவரை தேனி  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் பாண்டியனின் மனைவி ராமலட்சுமி நேரில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீசார் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் முருகன், அவரது மனைவி தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார். இதனால் கந்துவட்டி தடுப்புச் சட்டத்துடன், தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்  தலைமறைவான முருகன், தங்கமணியை தேடி வருகின்றனர்.

Related Stories: