சர்வதேச அயோடின் குறைபாடு தடுப்பு தினம் இன்று!...

அக்டோபர் 21

Advertising
Advertising

சர்வதேச அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினம் (World Iodine Deficiency Day)ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. போதுமான அளவுக்கு அயோடினை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அயோடின் குறைபாட்டினால் உண்டாகும் விளைவுகளை எடுத்துரைப்பதும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாகும்.

அயோடின் குறைபாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள்

மனித உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்களில் ஒன்று அயோடின். அது உடல் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது. சாதாரணமாக இயல்பான மனிதர் ஒருவருக்கு அன்றாடம் சராசரியாக 150 மைக்ரோகிராம் அளவு அயோடின் தேவைப்படுகிறது. அயோடின் குறைபாட்டின் விளைவுகள் கர்ப்பிணியையும் குழந்தையையும் அதிகமாகப் பாதிப்பதால், சாதாரணப் பெண்களை விட கர்ப்பிணிகளுக்குக் கூடுதலாக அயோடின் தேவைப்படுகிறது.

பொதுவாக அயோடின் சத்து நாம் பயன்படுத்தும் உப்பில் காணப்படுகிறது. மேலும் பால், முட்டை, கடல்பாசி, சிப்பி மீன், கடல்மீன், கடல் உணவு, இறைச்சி, தானியம் போன்றவற்றிலும் அயோடின் சத்து காணப்படுகிறது. அயோடின் இல்லாத உப்பு சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னையை நீங்கள் எதிர்கொண்டால் அருகிலுள்ள உப்பு மேற்பார்வை அதிகாரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு

காணலாம்.

தைராய்டு சுரப்பி வீக்கம், அறிவுக்கூர்மை குறைவு, மனக் கோளாறு, குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிப்பு, மூளைச்சிதைவு போன்ற மனநல பிரச்னைகள், நரம்புத்தசை பலவீனமும் தசை விறைப்பும் ஏற்படுதல், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றுதல், அடிக்கடி கருச்

சிதைவு ஏற்படுதல், குழந்தை இறந்து பிறத்தல், பேச இயலாமை மற்றும் குள்ளத்தன்மை போன்ற பிறப்புக் குறைபாடுகள், பார்வை, கேட்கும்திறன், பேச்சுக்குறைபாடு மற்றும் முடி இழப்பு போன்ற பிரச்னைகளும் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகின்றன.

Related Stories: