×

கஜா புயலில் வீடு இழந்தவர்களுக்கு ரஜினிகாந்த் உதவி: வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தார் ரஜினி

சென்னை: கஜா புயலால் வீடுகளை இறந்தவர்களில் 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது குறிப்பாக நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என நடிகர் ரஜினி முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இது தொடர்பான பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது. தபோது முற்றிலுமாக அந்த வீடு கட்டும் பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளின் சாவியை குடும்பத்தினரிடம் நடிகர் ரஜிகாந்த் வழங்கினார். அதனுடன் ஒரு குத்து விளக்கும் கொடுத்துள்ளார். மேலும் மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்து ஆய்வு செய்து அவர்களுக்கும் உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Rajinikanth ,storm ,house ,Gaza Storm Gaja , Kaja Storm, Rajinikanth, help
× RELATED ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று...