×

சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்: பாக். பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்ப்புருக்கான பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாக்கிஸ்தானும் அதிகார பூர்வமாக நவம்பர் 9ம் தேதி கர்த்தார்புர் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்கள் இங்கு விசா இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குருதுவாரா உடன் தர்பார் சாகிப், தேரா பாபா நானக் ஆலயம்  போன்றவை இணைக்கப்பட்டு சீக்கியர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சீக்கியர்களின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக இது மாறும் என்றும், பாகிஸ்தானுக்கு பொருளாதார ஏற்றத்தை தரும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மேலும் கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பாக மட்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கர்த்தார்புர் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட 20 டாலர் கட்டணத்தை ரத்து செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி வருகிறது.

Tags : announcement ,shrine ,Kartarpur Gurudwara ,Sikhs ,public ,Bagh ,Bagh. ,Holy Shrine , Sikhs, Kartarpur Gurudwara, Opens Nov. 9, Pak. Prime
× RELATED கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள்...