தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், மாம்பட்டு, நெற்குணம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் காலை மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், கிண்டி, மாம்பலம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததுள்ளதாக கூறப்படுகிறது. காலையில் ஒரு மணிநேரம் மழை விட்டிருந்தது நிலையில் பின்பு மீண்டும் மழை பெய்து வருகிறது. க‌ன‌ம‌ழை கார‌ணாக‌ கொடைக்கான‌லில் இருந்து அடுக்க‌ம் வ‌ழியாக‌ செல்லும் பெரிய‌குள‌ம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ம‌ண் ச‌ரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல்-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: