×

தொடர் கன மழை காரணமாக குமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை: தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, சிவகங்கையில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதேபோல் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை கனமழை கொட்டியது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமயில் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tags : School ,College Holidays ,Coimbatore Districts Kumari ,Kumari ,Coimbatore ,holidays ,districts , Holidays,schools ,colleges,Kumari and Coimbatore , heavy rains
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி