×

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் நகைகள் புதைப்பா? திருச்சி வங்கி கொள்ளையில் மேலும் 3 பேர் கைது: இரு மாநில போலீசார் முகாமிட்டு விசாரணை

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகடையில்  கடந்த 2ம் தேதி அதிகாலையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின  நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கணேஷ், சுரேஷின் தாயார்  கனகவல்லி, மணகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொள்ளை கும்பல் தலைவன் முருகன், சுரேஷ் ஆகியோர் சரணடைந்தனர். இதையடுத்து,  முருகனை போலீஸ் காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து  திருவெறும்பூர் காவிரிக்கரையில் புதைத்து  வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அந்த நகைகள்  பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனிடையே பெங்களூரு போலீசார் கணேசனின் அண்ணன் கோபால், உறவினர் கண்ணன் ஆகியோரை கைது செய்து பெங்களூரு அழைத்து சென்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி  கொள்ளை தொடர்பாக மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மேலும் 3பேரை நம்பர் 1  டோல்கேட் போலீசார் கைது செய்தனர். அவர்களை திருச்சிக்கு அழைத்து வந்து  ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்  பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் முருகன் கிருஷ்ணகிரி,  தர்மபுரியில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் முருகனுக்கு  அங்கு கூட்டாளிகள் இருக்கலாம். அல்லது அந்த பகுதியில் நகைகளை புதைத்து  வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக  பெங்களூரு மற்றும் திருச்சி தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மற்றும்  தர்மபுரியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.சுரேஷ் சுற்றித்திரிந்த லோடு வேன் பறிமுதல் நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு திருவண்ணாமலையில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சுரேஷ் திருவண்ணாமலையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று நேற்று முன்தினம் இரவு திருச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தங்க நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், சந்தேகம் வராமல் இருப்பதற்காக லோடு வேனில் சுற்றித்திரிந்த கொள்ளையன் சுரேஷ், திருவண்ணாமலையில் தங்கியிருந்த இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்தனர்.


Tags : Dharmapuri ,Krishnagiri ,bank robbery ,Robbery ,Trichy ,persons , Krishnagiri, Dharmapuri, Jewelry? 3 persons arrested for robbery
× RELATED தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி