ரூ.466 கோடி கடனை வசூலிக்க சொத்து ஏலம்

புதுடெல்லி: கடன் பாக்கி ₹466.49 கோடியை வசூலிக்க சொத்து ஏலத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.  வராக்கடன் பிரச்னை காரணமாக பொதுத்துறை வங்கிகள் தள்ளாடி வருகின்றன. இந்நிலையில், புதிய விதிகளின்படி கடன் மீட்பு நிறுவனங்கள், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு சொத்துக்களை ஏலம் விட்டு கடன் பாக்கியை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.

 இந்த வங்கியின் 11 கணக்குகள் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகை ₹466.49 கோடி வசூலிக்கப்படாமல் உள்ளது. இவற்றை அடுத்த மாதம் 7ம் தேதி மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்து கடன் தொகையை திரட்ட இந்த வங்கி முடிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாட்டியா குளோபல் டிரேடிங் நிறுவன கடன் பாக்கி ₹177.02 கோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: